2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பொங்கலுக்கு பொருட்கள் வாங்கி வந்தவர் விபத்தில் பலி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 13 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியா - கண்டி வீதியில் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து அநுராதபுரம் செல்லும் தனியார் பேரூந்தும் பொங்கல் திருநாளுக்காக பொருட்கள் வாங்கிய நிலையில் துவிச்சக்கர வண்டியொன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவத்தனர்.

மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் பணியாற்றி வந்த பி.செல்வராசா (வயது 56) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X