2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியாவிலுள்ள சிங்களப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 15 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்களப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆளுநரின் வவுனியா அலுவலகத்தில் கல்வித்திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இது தொடர்பில் கலந்துரையாடினார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர்,

'பாடசாலைகளின் அபிவிருத்தியானது கட்டிடங்களை கட்டுவதில் மாத்திரம் தங்கியிருக்கவில்லையெனவும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடைய செயற்பாடுகளிலும் தங்கியுள்ளது. இந்நிலையில், பாடசாலை சமூகம் பாடசாலையின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும். வெறுமனே அரசாங்கத்தினுடைய நிதியில் மாத்திரம் அபிவிருத்தியை கண்டுவிட முடியாது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை பாதுகாக்க வேண்டியது பாடசாலை சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும்.

அத்துடன், மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் கல்வியிலான அபிவிருத்தியை வெளிப்படுத்தும் முக்கிய காரணியாகும். க.பொ.த. சாதாரணதர பரீட்சை முடிவுகள் வெளிவந்ததன் பின்னர் அதன் பெறுபேறுகள் கண்காணிக்கப்படும். அதனடிப்படையில் பெறுபேறுகள் சிறப்பாக இல்லாத பாடசாலைகளின் நிலை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும்' எனவும் கூறினார்.

இதன்போது ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஐ.எஸ்.எம்.முகைதீன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சிங்கள பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X