2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இயக்கச்சியில் ரக்டர் சில்லு ஏறிய நிலையில் ஆணின் சடலம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 05 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜ.கிருஸ்ணன்
 
இயக்கச்சி மாசார் பகுதியில் ரக்டர் சில்லு ஏறிய நிலையில் ஆணின் சடலமொன்று இன்று காலை பளைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
 
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
 
இயக்கச்சி கோவில் பகுதியினைச் சேர்ந்த செல்வராசசிங்கம் கஜந்தன் (வயது 25) என்ற இளைஞர் நேற்றிரவு ரக்டரில் வயல் வேலைக்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
 
இன்று காலையில், பளை மாசார் பகுதியில் நெஞ்சில் ரக்டர் சில்லு ஏறிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ரக்டரினை நகர்த்தி சடலத்தினை சில்லுக்கடியிலிருந்து மீட்டுள்ளனர்.
 
இது தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X