2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கரை திரும்பாத இரு மீனவர்களையும் தேடும் பணி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சவேரியார்புரம் கடற்கரையோரத்திலிருந்து  தொழிலுக்குச் சென்ற மீனவர்களில் இருவர் இதுவரையில் கரை திரும்பவில்லை என சவேரியார்புரம் மீனவ சங்கத் தலைவர் எஸ்.சுரேஸ் தெரிவித்தார்.

சவேரியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த லோரன்ஸ் லதீஸ் (வயது 19), லிங்கதுரை சுரேஸ் (வயது 19) ஆகிய இரு மீனவர்களுமே இதுவரையில் கரை திரும்பவில்லை எனவும் அவர் கூறினார். 

மீனவர்கள் 3 பேர் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்றிருந்தனர்.  இவ்வாறு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 3 பேரும்  அன்றையதினம் மாலையாகியும் கரை திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மன்னார் பனங்கட்டிக்கோட்டுக் கிராமத்திலிருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் இந்த 3 மீனவர்களில் ஒருவர் ஆவார்.

மார்க்கண்டு லோரண்ஸ் (வயது 38) என்ற மீனவரே இவ்வாறு மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சவேரியார்புரம் மீனவ சங்கத் தலைவர் தெரிவித்தார்.

கரை திரும்பாத ஏனைய இரு மீனவர்களையும் தேடும் பணியில் சவேரியார்புரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, தாங்கள் மூவரும் பயணித்த படகு கடலில் கவிழ்ந்ததாகவும் ஏனைய இருவருடைய நிலைமை இதுவரையில் தனக்கு தெரியவில்லை எனவும் காப்பாற்றப்பட்டுள்ள மீனவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X