2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பண்டாரவன்னியனின் நினைவுதினம் கொண்டாட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மாவீரன் பண்டாரவன்னியனின் 202ஆவது ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 31ஆம் திகதி  வவுனியாவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா நகர சபையும் பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் 9.30 மணிவரை வவுனியா மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறும்.

காலை 9.30 தொடக்கம் நண்பகல் 1.30 மணிவரை கலை நிகழ்வுகளும் நினைவுப்பேருரைகளும் நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X