2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, செட்டிகுளம் முசல்குத்திப் பிரதேசத்தில் உள்ள புராதன ஆலயம் ஒன்று அமைந்துள்ள பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 4 பேரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது புதையல் இருக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்கான  அதிநவீன கருவி ஒன்றையும் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக  செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி புராதன ஆலயம் அமைந்துள்ள பகுதியில் புதையல் தோண்டுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்றபோது புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 4 பேரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

அவிசாவளை, காலிஎல, கிளிநொச்சி, செட்டிகுளம் பிரதேசங்களை சேர்ந்த 4 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X