2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் சிறுமி பலி

Super User   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரட்ணம் கனகராஜ், பாஸ்கரன்,எஸ்.றொசேரியன் லெம்பேட்,நவரத்தினம் கபில்நாத்

புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் டிப்பர் ரக வானம் மோதியதில் ஆறு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி உட்பட ஏழு சிறுமிகள் பரசங்குளம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் மாலை நேர வகுப்புக்காக சென்று கொண்டிருந்த வேளையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் குறிப்பிட்ட சிறுமியுடன் மோதியுள்ளது.

இதனால் சிறுமி ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியா புது அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் ஆறு வயதான கணேஸ் நிரோசினி என்பரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தினையடுத்து குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் திரண்டடுள்ளனர். இதனால் குறித்த வாகனத்தின் சாரதி வாகனத்தை விட்டு தப்பிச்சென்றுன்றுள்ளார்.

பின்னர் சிவில் உடையில் வந்த பொலிஸ் ஒருவர் குறித்த வாகனத்தை எடுக்க முனைந்த போது வாகனத்தை எடுக்க விடாது மக்கள் தடுத்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் பொதுமக்களினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் இப்பகுதிக்கு விரைந்த புளியங்குளம் பொலிஸார் விரைந்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு நீதவான்  வருகை தர முன்னரே பொலிஸார் சிறுமியின் சடலத்தினை புளியங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிரிழந்த சிறுமியின் தாய் உட்பட 7 பேர் டிப்பர் வாகனத்தை எடுக்கவிடாது வீதியின் குறுக்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X