2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மரம் வெட்டிய ஐவர் பிணையில் செல்ல அனுமதி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

மேற்படி 5 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவர் இவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பண்டிவிருச்சான் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில்  5 பேரையும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  அந்தப் பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து கைது மடு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X