2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தாமரை பறிக்கச்சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

வவுனியா, அட்டம்பகஸ்கட வாவியில் நீராடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கியதில் சிறுமியொருவர் பலியாகியதுடன் ஏனைய இருவரும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா மீள்குடியேற்ற கிராமமான செலலிஹினி பகுதியில் மீள்குடியேறிய குடும்பமொன்றைச் சேர்ந்த அஹின்சா நில்மினி (வயது 12) என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
 
அச்சிறுமியின் சகோதரர்களான அபிஷேக் தில்ஷான் (வயது 13) மற்றும் உமயங்க தில்ஷான் (வயது 10) ஆகிய இருவருமே காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தனது தாயாருடன் வாவியில் நீராடச் சென்ற இச்சிறுவர்கள், தாமரைப் பூ பறிக்க முற்பட்ட போதே நீரில் மூழ்கியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X