2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கரை திரும்பாத இரு மீனவர்களின் சடலங்களும் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சவேரியார்புரம் கடற்கரையோரத்திலிருந்து தொழிலுக்குச் சென்ற நிலையில் கரை திரும்பாத  மீனவர்கள் இருவரின் சடலங்களும்  மீட்கப்பட்டுள்ளன.

சவேரியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களான லோரன்ஸ் லடிஸ் (வயது லிங்கத்துறை சுரேஸ் (வயது 20) ஆகிய இரு மீனவர்களின் சடலங்களே நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் மூவர் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், இவர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மன்னார் பனங்கட்டிக்கோட்டுக் கிராமத்திலிருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் இந்த 3 மீனவர்களில் ஒருவர் ஆவார்.

முத்தாண்டி லோரண்ஸ் (வயது 40) என்ற மீனவரே இவ்வாறு மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கையில் சிலாவத்துறை, அரிப்பு ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 50 படகுகளில் சென்ற மீனவர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது நேற்று திங்கட்கிழமை  மாலை பேசாலை நடுக்குடா கடற்பரப்பில்  மேற்படி இரு மீனவர்களின் சடலங்களும்  மீட்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரின் சடலங்களும்  பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை  சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X