2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முள்ளியவளை தபாலகத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்றை வழங்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

'முல்லைத்தீவு, முள்ளியவளையிலுள்ள தபாலகத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்றை வழங்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 1952ஆம் ஆண்டு உப தபாலகமாக இருந்து பின்னர் 1980களில் தபாலகமாக தரமுயர்த்தப்பட்டுட்ட குறித்த தபாலகம் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் வாடகை வீடொன்றிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.

நிரந்தரக் கட்டிடமொன்று இல்லாமையினாலேயே குறித்த தபாலகம் வீடொன்றில்

இயங்கிக் கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறு தபாலகம் வீட்டில் இயங்குவதனால் முல்லைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட சுமார் பத்து கிராமங்களுக்கும் அதிகமான பொதுமக்கள் தமது

தபாலக தேவைகளுக்காக இங்கு வருகை தரும்போது இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும் இதனால் தமது செயற்பாடுகளை தொடர்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஒரு தபாலகத்திற்கு தேவையான போதிய வளங்கள் முள்ளியவளை தபாலகத்தில் உள்ள போதிலும் அதனை உரிய முறையில் செயற்படுத்துவதற்கு இடவசதி இல்லாமையினால் தபாலக நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு தபாலக நிர்வாகம் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தரம் 1 தபாலகமாக உள்ள முள்ளியவளை தபாலகத்திற்கு நிரந்தரக் கட்டிடமொன்றை அவசரமாக வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 
இத்தபாலகத்திற்கு முள்ளியவளை, தண்ணீரூற்று, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, முறிப்பு, குமுழமுனை, கேப்பாப்பிலவு, மாமூலை, கணுக்கேணி, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது தபாலக தேவைகளுக்காக வருகை தருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X