2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு வட மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படாமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் தெரிவில் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதிற்கான காரணத்தினை கோரிய மகஜர் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X