2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வள்ளிபுனம் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் காட்டுப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
வள்ளிபுனம் பகுதியினைச் சேர்ந்த பாலையா பிரபாகரன் (வயது 25) என்ற நபரே இவ்வாறு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமைஇரவு குறித்த காட்டுப்பகுதிக்கு நான்கு பேருடன் கசிப்பு அருந்துவதற்காகச் சென்றவர் நேற்று வரையும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து கிராமவாசி ஒருவர் வள்ளிபுனம் காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக நேற்று இரவு 8.30 மணிக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் இன்று (8) காலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் வந்து சடலத்தினை மீட்டு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இல்லாத காரணத்தினால் சடலத்தினை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்களுக்காக ஒப்படைத்தனர்.

சடலத்தினை பொலிஸ் மீட்டபோது சடலத்தின் கால்களினைத் தவிர மிகுதிப் பகுதி சருகுகளினால் மூடப்பட்ட நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X