2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முதியவர்களுக்கான ஆசனங்கள் அடையாளப்படுத்தல்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


முதியவர்களுக்கு பஸ் வண்டிகளில் ஆசனங்களை அடையாளப்படுத்தும் முகமாக ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு வவுனியா பஸ் வண்டித் தரிப்பிடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது தனியார் மற்றும் அரசாங்க பஸ் வண்டிகளில் முதியவர்களுக்கான ஆசனங்களை அடையாளப்படுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் இராஜலிங்கம், யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பத்மினி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X