2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் காரணங்களால் தான் நான் பங்கேற்கவில்லை: உறுப்பினர் குணசீலன்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் தான் கலந்து கொள்ளாமைக்காண எனது மனைவி விபத்தில் சிக்கியதே என வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை.எனது மனைவி அவ்வாறான விபத்தில் மாட்டிக்கொள்ளவும் இல்லை.

நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது.அதனை வெகு விரையில் வெளியிடுவேன் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X