2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கணினி வலையமைப்பினூடாக பிறப்பு, இறப்புச் சான்றிதழ்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி. சிவகருணாகரன்

கணினி வலையமைப்பினூடாக பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாடு கிளிநொச்சியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.  பிறப்பு இறப்பு பதிவாளர் நாயகம் ஈ.எம் குணசேகர இந்தச் செயற்பாட்டை கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச  செயலகத்தில் ஆரம்பித்து வைத்தார்.

பிறப்பு இறப்புச்சான்றிதழ்களை கணினி மயப்படுத்தப்பட்ட முறையினூடாக வழங்கும் நிகழ்வு இன்று முதல் கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தடுவதாகவும் அவர் தெரிவித்தார்.  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இதற்கென அமைக்கப்பட்ட பிரத்தியேக அமைவிடத்தில் இன்று தொடக்கம் இச்செயற்பாடு நடைமுறைக்கு வருகின்றது. தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இச்செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. 

இதனூடாக மாவட்டத்தில் எந்தப்பாகத்தில் பிறந்த ஒரு நபரும் தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்குச் சென்று குறித்த சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதேவேளை பதியப்படாத பதிவுகளை பதிவுசெய்வதற்கும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பதிவுகளில்டிதிருத்தங்களைச் செய்வதற்குமான செயற்பாடுகளையும் இச்செயலகங்களில் மேற்கொள்ளமுடியும்.

இதேவேளை,  கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்காலத்தில் லங்கா அரச வலைப்பின்னல் இணைப்புக்கள் இணைக்கப்படுவதற்கான  செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் நாட்டின் ஏனைய மாவட்டங்களுடனும் இணைப்புக்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் எப்பாகத்திலிலும் வசிக்கும் எவரும் தமக்கு அருகிலுள்ள பிரதேச செயலகங்களில்  பிறப்பு இறப்புப்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படும் என மேலதிகப்பதிவாளர் சதாசிவம்ஐயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய பதிவுப்படிவங்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட மேலதிகப்பதிவாளர் சதாசிவம்ஐயர், குறுஞ்செய்தி (எஸ் எம் எஸ்) மற்றும் கிரடிற்காட் போன்ற செயற்பாட்டுமுறைகளினூடாகவும் குறித்த ஆவணங்களை மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இச் செயற்பாடு இன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும் இச் செயற்பாடு நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டஅரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன,;  மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிறீனிவாசன், பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் மற்றும் பிறப்பு, இறப்புபதிவுத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டவர்களும் அரச திணைக்கங்களின் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X