2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சோஷலிச இளைஞர் சங்கத்தின் மோட்டார் வாகனப் பவனி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க

சேகுராவின் நினைவுகளை சுமந்து அவரின் கொள்கையுடன் ஒன்றுபட்ட மக்களாக இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் சோஷலிச இளைஞர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் வாகனப் பவனி இன்று சனிக்கிழமை வவுனியாவை வந்தடைந்தது.

கடந்த 8ஆம் திகதி இருநூற்றுக்கும் மேற்பட்ட மோட்டர் சைக்கிள்களுடன் 400 வரையானோர் இந்தப் பேரணியை தென் மாகாணத்தில் ஆரம்பித்து காலி, அம்பாந்தோட்டை, மிகிந்தலை, பதுளை, அநுராதபுரம் ஊடாக பவனி வந்து  வவுனியாவை வந்தடைந்தனர்.

வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கைள விநியோகித்ததன் பின்னர் மீண்டும் அநுராதபுரம் சென்று அங்கு இடம்பெற்ற சகோதரத்துவத்துக்கான மக்கள் அரண் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்தப் பேரணி  இணைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X