2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபை உறுப்பினர்களின் முதலாவது மக்கள் குறைகேள் நடவடிக்கை

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், எஸ்.றொசேரியன் லெம்பேட்


முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற் கொந்தளிப்பால் பாதிப்படைந்த பிரதேசத்திற்கு மாகாண கடற் தொழில்  அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்து ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

கடற் கொந்தளிப்பினால் பாதிப்படைந்த முல்லைத்தீவின் கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, தியோகுநகர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அழிவுகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளனர்.

வட மாகாண கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் முதற் தடவையாக இந்த பயணத்தை முல்லைத்தீவுக்கு மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோதரலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் மரியம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன், ஆறுமுகம் சின்னத்துறை துரைராசா ரவிகரன், வீரபாகு கனகசுந்தரசுவாமி, திருமதி மேரி கமலா குணசீலன் ஆகியோhர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X