2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லை. கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட  கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

வடமாகாண  மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரனிடமே முல்லைத்தீவு மாவட்ட  கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மேற்படி மகஜரைக் கையளித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன், யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த  கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில்  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்துடன் கலந்துரையாடினார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவிக்கையில்,

வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதாலும் எமது மீனவர்களின் வலைகள் திட்டமிட்டு அறுக்கப்படுவதாலும் எமது கடற்றொழிலாளர்களின்  தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில்  பல கடற்றொழிலாளர்கள்  கடற்றொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' எனவும் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X