2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனங்கள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 255 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனங்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்படி நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.பரமதாஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X