2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் சுயதொழில் முயற்சிக்காக காளான் வளர்ப்பு பயிற்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களினால் வவுனியா மாவட்ட சர்வோதையா நிலையத்தில் இன்று காளான் வளர்ப்பு பயிற்சி இடம்பெற்றது.

சர்வோதய சிரமதான சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் தேசோதய சபை அங்கத்தவர்களுக்கும் சுயதொழில் ஊக்குவிப்பை ஏற்படுத்திக் காளான் வளர்ப்பை கிராமமட்டத்தில் அதிகரிப்பதற்காக இப்பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டதாக சர்வோதய நிலையத்தில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறியினை விவசாயத்திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.யாமினி, விவசாய போதனாசிரியர் கே.பிரிந்தா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு காளான் வளர்ப்பு முறை தொடர்பான செய்முறை விளக்கங்களை வழங்கினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X