2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சத்தியப்பிரமாண நிகழ்வை சுரேஸ் எம்.பி புறக்கணிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா,நவரத்தினம் கபில்நாத்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எப் வடமாகாண உறுப்பினர்கள் மூன்று பேரும் இன்று புதன்கிழமை  வவுனியாவில், சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மன்னார் மாவட்ட உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரே சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வவுனியாவில் தங்கியிருந்தபோதும், வவுனியாவில் நடைபெற்ற தனது கட்சி அங்;கத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்விற்குச் செல்லவில்லை.

இருந்தும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வட மாகாணசபைக்கு இதே கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த ஐ. இந்திரராஜா இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை.

தான் வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளமையினால் இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Sumathy m Wednesday, 16 October 2013 10:36 PM

    என்னதான் சொன்னாலும் தம்பியாருக்கு மந்திரி பதவியை எழுத்து மூலம் கோரியிருந்த சுரேஷ் ஐயாவுக்கு வயித்தெரிச்சல் இருக்கத்தான் செய்யும். இனி என்ன செய்யுறது ஒட்டிக்கொண்டுதான் இருக்க வேணும். விட்டிட்டுப் போய் தான் என்ன செய்யிறது...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X