2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்களை தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவை நேற்று சனிக்கிழமை  வழங்கியுள்ளது.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட 89 குடும்பங்களுக்கே  சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 7 பேருக்கு சைக்கிள்களும் 5 பேருக்கு மீன்பிடி வள்ளங்களுடன் வலைகளும் 34 பேருக்கு கோழிக்குஞ்சுகளுடன் கோழிக்கூடுகளும் 34 பேருக்கு ஆடுகளும் 6 பேருக்கு இடியப்பம் உணவு செய்வதற்கான உபகரணங்களும் 3 பேருக்கு மிக்சர் செய்தவற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அமைப்பாளரும் உலக மீனவச் சம்மேளனத்தின் விசேட பிரதிநிதியுமான ஹேமன்குமார, தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் வட, கிழக்கு பொது இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X