2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கல்வித்திட்டத்தில் தமிழர்களின் வரலாற்று விடயங்கள் அரிதாகவுள்ளன: ப.சத்தியலிங்கம்

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'எமது கல்வித்திட்டத்தில் தமிழர்கள் சார்;ந்த விடயங்கள் அரிதாகவே உள்ளன. அதன் காரணமாக எமது மாணவாகள் எமது வரலாற்றை தெரிந்து கொள்வதை விட மற்றைய சமூகத்தை பற்றி அறிகின்றனர்' என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் உள்ளுராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (5)  நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்து. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று எமது கல்வித் திட்டமிடலானது கூடுதலாக எமது சமூகத்தை நாம் தெரிவதிலும் விட வேறு சமூகங்களை தெரியக் கூடியதாகவே காணப்படுகின்றது. இன்று எமது மாணவர்களிடம் பண்டாரவன்னியனைப் பற்றி பத்து வசனம் எழுதச் சொன்னால் எழுதமாட்டார்கள். ஆனால் தென் பகுதியில் இருந்த அரசர்களைப் பற்றி எழுதச் சொன்னால் எழுதுவார்கள்.

ஏனென்றால் பாடசாலைப் புத்தகங்களில் அவையே உள்ளன. எமது மாணவர்களும் அவற்றைப் படிக்கிறார்களே தவிர வெளியில் வந்து படிப்பது மிகவும் குறைவு.

எமது கல்வித்திட்டத்தில் தமிழர்களின் வரலாறு சார்ந்த விடயங்கள் மிகவும் அரிது. இன்னும் அருகிக் கொண்டு போகின்றது. எனவே எமது அறிவு சர்ந்த மற்றும் வரலாறு சார்ந்த பல விடயங்களினை வெளியில் சென்று வாசிப்பதன் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும்;. அவ்வாறு வாசிக்காது விடுவோமானால் எமது வரலாறு சார்ந்த விடயங்களை காலப் போக்கில் விட்டுவிடுவோம்.

முன்னாள் நகரசபைத் தலைவர் ஜி.ரி.லிங்கநாதனினதும்; உறுப்பினர்களினதும் முயற்சியால் இந்த மாவட்டத்திற்கு அரியதொரு சொத்தாக நூலகம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் தொகை குறைவாகவுள்ளமை கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

இலத்திரனியல் ஊடகங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதும் வாசிப்பு குறைந்தமைக்கு ஒரு காரணமாகும். ஐரோப்பிய நாடுகள் இலத்திரனியல் ஊடகங்களை எமக்கு முன்பே பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஆனால் அங்கு வாசிப்பு பழக்கம் இன்றும் காணப்படுகின்றது. அவர்கள் பொழுது போக்கு நேரங்களில் கூட புத்தகங்களை வாசிப்பார்கள். ஆனால் நாங்கள் அந்த பழக்கத்தை தொலைத்து விட்டோம். அதற்கு முக்கியமான காரணம் எமது கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகள் என்று சொல்லலாம். எத்தனை வாசிப்பு மாதத்தை நாம் கொண்டாடினாலும் சிறுவயதில்
இருந்து இதனை கொண்டு வரவிட்டால் பயன் இல்லை.

வாசிப்பு என்பது பழக்கமாக வரவேண்டும். சிறுவயதில் வாசிப்பு பழக்கம் உருவாக வேண்டும். ஆனால் எமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும். பரீட்சைக்கான படிப்பு என்பதை விட அது வாழ்க்கைக்கானதாக மாற வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X