2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்கள் பாதுகாப்பும் மேம்பாடும் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


றொசேரியன் லெம்பர்ட், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மன்னார் பிரதேச செயலகமும் மன்னார் சிறுவர்கள் சம்மேளனமும் இணைந்து நடத்திய சிறுவர்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் எதிர்கால இலட்சியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை காலை மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட வேர்ள்ட் விஷன் நிறுவன சிறுவர் நலன் அபிவிருத்தித் திட்ட இணைப்பாளர் கே. லிங்கராஜா தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மன்னார் நகரில் ஆரம்பித்த மேற்படி ஊர்வலம் மன்னார் பிரதேச செயலகத்தில் சென்று முடிவடைந்தது. மன்னார் சிறுவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் ஐந்நூறிற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுவர் சம்மேளன உறுப்பினர்கள் சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு, மேம்பாடு, எதிர்கால இலட்சியம், சுதந்திரம் உள்ளிட்ட சிறுவர் நலன் தொடர்பான பல்வேறுபட்ட கவன ஈர்ப்பு வாசகங்களைத் தாங்கிச் சென்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X