2025 ஜூலை 28, திங்கட்கிழமை

பண மோசடி செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 19 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று திங்கட்கிழமை  மாலை கைதுசெய்துள்ளனர்.

வங்கிக்கடன், வேலைவாய்ப்பு மற்றும் வாகனம்; எடுத்துத் தருவதாக கூறி வவுனியாவில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பல இலட்சக்கணக்கான பணத்தை சந்தேக நபர்; மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கடன் பெற்றுத்தருவதற்கான  போலியான விண்ணப்பப்படிவங்களையும் சந்தேக நபர் வழங்கிவந்துள்ளார்.

மேலும், தான் பணம் வாங்கிய மக்களிடம்  தன்னுடன் தொடர்புகொள்வதற்காக வழங்கிய தொலைபேசி இலங்கங்களும் செயலிழந்து காணப்பட்டன. இந்த நிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் சந்தேக நபர் தொடர்பில் உசாரடைந்த நிலையில் மடக்கிப் பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X