2025 ஜூலை 28, திங்கட்கிழமை

ஆசிரியர் காணாமல் போனமையை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 நவம்பர் 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க


வவுனியா பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியரொருவர் காணாமல் போனமயை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்கு முன்னால்இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மாங்குளம் அல்-ஹாமியா முஸ்லம் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியரான கார்த்திகேசு நிரூபன் (38 வயது) கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.குறித்த ஆசிரியர் இதுவரை கண்டு பிடிக்கப்படாமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வட மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சமயமே இவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன் காணாமல் போனோரின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸலில் முறைப்பாடு செய்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தாம் ஆர்ப்பாட்டத்ததை மேற்கொண்டதாக தெரிவித்ததுடன் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் கண்டுபிடிக்கப்படாவிட்டால் தாம் பெருமளவிலான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவத்தார்.

இதேவேளை, ஆர்பபாட்டக்காரர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல்போன ஆசிரியர் கா.நீரூபனின் பெற்றோர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், இ.இந்திரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X