2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மூங்கிலாறு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு, வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், இருட்மெரு உள்ளிட்ட பகுதி மக்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள மூங்கிலாறு வைத்தியசாலை போதிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு இதுவரை நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. கடந்த பல மாதங்களாக மருத்துவர்கள் எவரும் இல்லாத நிலையில் தற்போது தற்காலிகமாக மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது குறித்த மருத்துவர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் அதிகளவு நேரம், பணம் செலவு செய்து புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனால் குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவர் ஒருவரை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .