2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வரவு - செலவுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறு த.தே.கூ. அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரவு - செலவுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் மீதோ அல்லது தவிசாளர் மீதோ குற்றச்சாட்டுக்கள் இருக்குமாக இருந்தால் அவை தொடர்பாக எழுத்து மூலம் தலைமைக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில் அவை விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஆனால் வெறுமனே கருதுகோள்களின் அடிப்படையில் பிரதேச சபையின் தவிசாளர் கொண்டுவரக் கூடிய வரவு - செலவு திட்டத்தை எதிர்த்தோ நிராகரித்தோ வாக்களிப்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கமாட்டாது.

அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்குவிதிகளுக்கு முரணானது. வரவு-செலவுத் திட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தால் இறுதி வாசிப்பிற்கு முன்பாக அவற்றைக் கலந்துபேசி அனைவரும் ஏற்கக்கூடிய வரவு-செலவுத் திட்டமாக அதனை முன்வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறில்லாமல் தனிப்பட்ட குரோதங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ அல்லது குறுகிய குழு நலன் சார்ந்தோ வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கக்கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனை மீறுவோர்மீது கட்சி காத்திரமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .