2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்க மன்னாரில் இடம் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்புக் காலங்களுக்கான வியாபார நடவடிக்கைகளை முன்னிட்டு, மன்னார் நகரசபை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கு மன்னார் நகரசபை   இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதி தொடக்கம் மன்னார் பிரதேச செயலகம்வரை  வியாபார நிலையங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரையில்  137 தற்காலிக வியாபார நிலையங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  மேற்படி வியாபார நிலையங்களின் உரிமையாளர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபா நில வாடகையாக அறவீடு செய்துள்ளதாகவும்  அவர் கூறினார்.

இந்த நிலையில், வியாபார நிலையம் ஒன்று அமைப்பதற்கான  நில வாடகையாக 12,000 ரூபா அறவீடு செய்யப்படுகின்றது. இருப்பினும், கடை கொண்டுள்ள நில அளவுக்கு ஏற்ப  வாடகை அறவீடு செய்யப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

இன்னும் 20 வியாபார நிலையங்கள் அமைப்பதற்கும் இடம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான வியாபார நிலையங்கள் எதிர்வரும் 31ஆம் திகதிவரையுமே இயங்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு கிடைக்கும் பணத்தைக் கொண்டு   மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தை அபிவிருத்தி செய்வதற்கு மன்னார் நகர சபை தீர்மானித்ததுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .