2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, முரசுமோட்டை கிராமத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் ஆரம்பநாள் நிகழ்வு இன்று (17) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முரசுமோட்டை அ.த.க. பாடசாலை மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தில் சிரமதான வேலைத்திட்டங்களில் ஈடுபடுதல், சினேகபூர்வ விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல், கிராம மக்களின் வாழ்வாதாரம் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இப்பரிமாற்ற வேலைத்திட்டத்தில் கண்டி மாவட்டத்திலிருந்து வருகை தந்துள்ள இளைஞர்கள் யுவதிகளும் பங்குபற்றவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .