2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 17 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தினை மூடிவிடுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்த சிறுவர் இல்லத்தின் காப்பாளரான கல்யாண திஸ்ச தேரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.

இவருக்கு எதிரான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வவுனியா மாவட்ட நீதவான் வி. இராமகமலன் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் உத்தியோகத்தர்களது அறிவுறுத்தல்களை இச் சிறுவர் இல்லம் கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வந்ததாக சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்தே அந்த சிறுவர் இல்லத்தை மூடிவிடுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன்,சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விகாராதிபதியை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதனால் வழக்கின் அடுத்த தவணையின் போது அந்த அதிகாரிகள்  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .