2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தாலிக்கொடியை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பெண் ஒருவரின் தாலிக்கொடியை பறித்துச்சென்ற நபரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அன்றையதினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மன்னாரிலிருந்து தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்திற்கு பஸ் வண்டியொன்றில் சென்ற குறித்த பெண், அப்பஸ்வண்டியிலிருந்து  இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரது தாலிக்கொடியை அவ்விடத்தில் நின்ற மேற்படி சந்தேக நபர் அறுத்துச்சென்றுள்ளார்.

சுமார் 800,000 ரூபா பெறுமதியான தாலிக்கொடியே இவ்வாறு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து  மன்னார் பொலிஸ் நிலையத்தில் தாலிக்கொடியை பறிகொடுத்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், மன்னார் புதுக்குடியிருப்பு கோணர் பண்ணைக் கிராமத்தில் சந்தேக நபரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், தாலிக்கொடியையும் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .