2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

விவசாய திணைக்களங்களுக்கு பேரூந்துகள் அன்பளிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள விவசாய திணைக்களங்களுக்கு பேரூந்துகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

திருநெல்வேலியிலுள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே இந்தப் பேரூந்துகள் வழங்கப்பட்டன. வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துஐர ஐங்கரநேசனினால் இந்தப் பேரூந்துகள் கையளிக்கப்பட்டன.

இந்த பேரூந்துகளை வாங்குவதற்கு ஜக்கிய நாடுகளின் உணவு விவசாய நிறுவனம் மற்றும் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் ஆகியன நிதியுதவி வழங்கியுள்ளன.

இப்பேரூந்துகள் விவசாய அறிவுசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகளினதும் விவசாயப் போதனாசிரியர்களினதும் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் போக்குவரத்துக்;குப் பயன்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .