2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பொதுக் கிணற்றில் வீழ்ந்து அப்பகுதியை சேர்ந்த விஜயன் ஆதித்தியன் (வயது 6) என்ற சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் (17) தனது சகோதரனுடன் வீதியோரத்தில் விளையாடிவிட்டு வீடு செல்வதாக தெரிவித்துச் சென்ற இச்சிறுவன் பொது கிணறொன்றில் தண்ணீர் பருகுவதற்காக சென்ற நிலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அக்கிணற்றில் நீர் அள்ளச் சென்ற ஒருவர் கிணற்றுக்குள் சிறுவன் கிடப்பதை கண்டு கூக்குரலிட்டு அயலவர்களை வரவலைத்து சிறுவனை மீட்டு மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .