2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொடுக்க முடியாது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.சிவகருணாகரன்


கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடுக்குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொடுக்க முடியாது. இது விவசாயிகளைப் பாதிக்கும் என இரணைமடுத் திட்டத்தின் கீழ் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

தங்களின் இந்த நிலைப்பாட்டை அறிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை மேற்படி விவசாயிகள் இன்று (18) கரைச்சிப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடத்தினர்.

இதில் விவசாயிகள் அமைப்பினர் உபதலைவர் சி. சிவப்பிரகாசம் விளக்கம் தெரிவிக்கும்போது, இரணைமடுக் குளத்தின் நீரை நம்பியே ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் உற்பத்தியி;ல் இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையே பெருமளவு பங்கை வகிக்கின்றது.

சில காலங்களில் குளத்திலிருந்து அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்படுவது உண்மையென்றாலும் வரட்சியான காலங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும் நாம் வரட்சியை எதிர்கொண்டுள்ளோம்.

குளத்தைப் புனரைக்க வேண்டிய தேவை இருந்தாலும் அது விவசாயிகளின் நன்மைக்காகவே அமைய வேண்டும். இந்த நிலையில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று விவசாயிகள் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .