2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மரப்பட்டறை நடத்திய ஆறு பேருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முள்ளியவளை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட மதவாளன்சிங்கம் குளம், பூதன்வயல் பிரதேச காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமாக மரப்பட்டறையொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் ஆறு பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்று  செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மிக நீண்ட காலமாக முள்ளியவளை மதவாளசிங்கம் குளம் பூதன்வயல் பிரதேச காட்டு பகுதிக்குள் குறித்த சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக இந்த சட்டவிரோத மரப் பட்டறையை நடத்தி வந்துள்ளனர். எனினும், விஷேட அதிரடிப்படையினரால் கடந்த திங்கட்கிழமை குறித்த பிரதேசம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் உரிமையாளர் ஆறு பேர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அத்துடன் குறித்த மரப்பட்டறையில் இருந்த சுமார் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான முதுரை மற்றும் பாலை மரத்துண்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆறு பேரும் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அந்த ஆறு பேரையும் இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நிதமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .