2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

'உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்' நற்பணிமன்றம் உதயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


'உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்' என்ற நற்பணிமன்றத்தின் பணி  கனகராயன்குளத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் நற்பணிமன்றத்தின் பணியை ஆரம்பித்து வைத்துள்ளார்.  

இந்த நற்பணிமன்றத்தின் தலைவராக சி.சியாந்தன், செயலாளராக யோ.நிதர்சன், உபதலைவராக ஆ.சசிநாத், உபசெயலாளராக ஆர்.அனோசன், பொருளாளராக சி.நிலக்சன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  மேலும் நிர்வாகசபை உறுப்பினர்களாக கஜிவன், அருந்தவன், தவநீதன், மிதுர்சன், சதீஸ்குமார், சுதர்சன், சுஜிதன், தர்சன், சிறிகாந், தனுசன், பார்தீபன், கன்ஸ்ரன், வி.தர்சன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த  தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன்,

'நாங்கள் 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிவரை சமூக பொருளாதார நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி வடக்கு, கிழக்கில் பல பாரிய செயற்றிட்டங்களையும் வறிய  மக்களுக்கு பலதரப்பட்ட உதவிகளையும் செய்துவந்தோம். 

மீண்டும் 2003ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஈரோஸ் அமைப்பு மூலமாகவும் சுயமாகவும் குறிப்பாக வன்னிப்பகுதியில் பாடசாலை
மாணவர்களுக்கான உதவிகளையும் வறிய மக்களுக்கான உதவிகளையும் மக்களுக்காக இன்றுவரை செய்துவருகின்றோம்.

மேலும், எமது சேவையை வலுப்படுத்தும் முகமாக 'உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்' என்ற நற்பணிமன்றத்தை ஆரம்பித்து வறிய மாணவர்களின் கல்வியையும் வறிய மக்களின் பொருளாதாரத்தையும் மேலுயர்த்துவதே எமது முக்கிய குறிக்கோளாகும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .