2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இரும்புக்காக விற்ற வாகனங்கள் தனியார் காணியில்; பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ர.நாதன்


வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட வாகனங்களை யாழ். மானிப்பாயிலுள்ள தனியார் ஒருவரின் காணியில் பலவந்தமாக போட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் விற்பனை செய்யப்பட்ட மேற்படி வாகனங்களை லொறிகளில் ஏற்றிவந்த சிலர், மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள காணியிலேயே அத்துமீறிப் போட்டுள்ளனர்.

மேற்படி காணி வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வசிக்கும் ஒருவருடைய காணியாகும்.

தனது காணியில் மேற்படி வாகனங்கள் அத்துமீறிப் போட்டுள்ளதை அறிந்த காணி உரிமையாளர், அப்பகுதி கிராம அலுவலருக்கு உறவினர் ஒருவர் மூலமாக தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கிராம அலுவலகர் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில்  டெங்கு பரவும் என்ற  அபாயம் காரணமாகவே, மேற்படி வாகனங்கள் இரும்பு விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இவ்வாறு மேற்படி வாகனங்கள் மானிப்பாயிலுள்ள மேற்படி காணியில் போட்டுள்ளதன் மூலம் அங்கு டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .