2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

திருக்கேதீஸ்வரத்தில் மனித எச்சங்கள் மீட்ட இடம் 'தொல் பொருள் ஆராய்ச்சி இடமாம்'

Kanagaraj   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அவ்விடத்தில் தோண்டும் பணிகள் இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையிலேயே அவ்விடத்தில் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் சுமார் 75 மீற்றர் தொலைவிலேயே சடலங்களின் எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டன.

குடி நீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில்  பள்ளம் தோண்டிய போதே மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று மனித மண்டையோடுகளும்,ஏனைய  பாகங்களுக்கான எலும்புகளும் நேற்று மீட்கப்பட்டன.

இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதன்பின்னர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உட்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்னார் நீதவானின் கவனத்திற்கு மன்னார் பொலிஸார் கொண்டு வந்தனர்.

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தை மன்னார் நீதவான்  ஆனந்தி கனகரட்னம் இன்றுக்காலை பார்வையிட்டார். அதன்பின்னர் மன்னார்  நீதவான் மற்றும்; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

மனித எச்சங்கள் மீட்கப்பட்டும் இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரிமூஸ்  சிறாய்வா சென்று பார்வையிட்டார்.

இது இவ்வாறிருக்க மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள பகுதியில் 'தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கான இடமாகும்' என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .