2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் திவிநெகும நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


திவிநெகும திட்டத்தின் ஆறாம் கட்டப் பணிகள் இன்று திங்கட்கிழமை வவுனியா வடக்கு புளியங்குளம் தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனின் வழிகாட்டலில் புளியங்குளம் தெற்கு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கந்தசாமியினால் மரக்கன்று நடப்பட்டதுடன்,  மக்களுக்கு மரக்கறிக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது கிராம சேவகர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .