2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குஞ்சுக்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு: அருட்தந்தை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


குஞ்சுக்குளம் கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்று குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சுகுனராஜ்  தெரிவித்தார்.

குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது,

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதா கிராமம், பெரிய குஞ்சுக்குளம், பெரிய முறிப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய நிலையில் குஞ்சுக்குளம் கிராமம் உள்ளது. குறித்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த 350 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த மக்களின் வாழ்வாதாரத்தை பார்க்கின்ற போது இவர்கள் விவசாயிகளாக உள்ளனர். எனினும் இவர்கள் பெரிய அளவில் விவசாயத்தை மேற்கொள்ளாது சிறிய அளவில் விவசாயத்தை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மழைக்காலங்களில் மக்களின் போக்குவரத்து, குஞ்சுக்குளத்தில் ஏற்படும் வெள்ளப்பெறுக்கினால் துண்டாடப்படுவது அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக மழைக்காலம் என்றால் குஞ்சுக்குளம் மக்களின் போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்புகளும் துண்டிக்கப்படுவதினால் பல்வேறு அவசர தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவம் மற்றும் ஏனைய நிகழ்வுகளாக இருக்கலாம் எவற்றையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். குஞ்சுக்குளம் பிரதான வீதியில் இருந்து மாதா கிராமம், பெரிய குஞ்சுக்குளம், பெரிய முறிப்பு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் செல்லும் வீதியின் தொடர்பு துண்டிக்கப்படுகின்றது.

குறித்த கிராமத்திற்கு பல்வேறு தேவைகள் உள்ளது. அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாக குஞ்சுக்குளம் கிராம பகுதியில் மருத்து வசதிகள் இல்லாத நிலை உள்ளது. வாரத்திற்கு ஒரு தடவை நடமாடும் வைத்திய சேவை மாத்திரமே இங்கு இடம்பெறுகின்றது.

அதுவும் குஞ்சுக்குளம் வீதியில் ஆறு பெருக்கொடுத்து வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டால் அந்த நடமாடும் சேவை இடம் பெற மாட்டாது.

எனவே இக்கிராம மக்களின் நலன் கருதி குறித்த மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய ஒரு வைத்திய நிலையத்தை இங்கு அமைத்துத்தர வேண்டும்.பாம்பு கடித்தால் அவரை வீதி தடைப்படுகின்ற போது வெளியில் கொண்டு வர முடியாத நிலை ஏற்படும்.எனவே இப்பகுதியில் துனை வைத்தியசாலை ஒன்றை அமைப்பது இந்த மக்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

அத்துடன் ஏனைய அபிவிருத்தியை பார்க்கின்ற போது வடமாகாண சபையூடாக பல அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும்.குஞ்சுக்குளம் பிரதான பாலம் வடமாகாண சபையூடாக அமைக்கப்படுவது.

பெரியதொரு ஆசீர்வாதம் என்றுதான் கூற முடியும். தற்போது இக்கிராமத்திற்கு போக்குவரத்து சேவை பற்றாக்குறையாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சேவைகள் மாத்திரமே இடம் பெறுகின்றது.

இதனால் அவசர தேவைகளுக்கு போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.எனவே குறித்த போக்குவரத்துச் சேவைகளை மேலும் அதிகரிப்பது நல்லது.என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .