2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கற்சிலைமடு கிராமத்துக்கு மின் இணைப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கற்சிலைமடு கிராமத்துக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

வுன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த கிராமத்துக்கான மின் இணைப்பை வைபவரீதியாக வழங்கி வைத்தார்.

குறித்த கிராம மக்கள் அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.குருபரன், ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கனகரத்னம், வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .