2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நந்திக்கடல் மீன்கள் தொடர்ந்தும் இறப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு, வட்டுவாகல், நந்திக்கடலிலுள்ள மீன்கள் தொடர்ந்தும் இறந்த நிலையில் கரையொதுங்குவதனால் அப்பகுதி மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இம்மாதம் இரண்டாம் திகதி முதல் இரு வாரங்களாக குறித்த கடலில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வந்தன. இதனால், நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்கு அங்குள்ள மீனவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

சிலாப்பி, கெளிர், மணல், மன்னா, கூறல் உள்ளிட்ட மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன. இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடிக் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் துப்பரவு செய்து வருகின்றனர்.

எனினும், நந்திக்கடலிலுள்ள மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புறச் சூழல் மாசடைவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .