2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிராம அலுவலரின் வீட்டுக்கு கல்வீச்சு தாக்குதல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முரசுமோட்டை (கிளி – 50) கிராமஅலுவலர் எஸ்.நந்தகுமார் என்பவரது வீட்டின் மீது, செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீதியில் நின்றிருந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் 10 இற்கும் மேற்பட்ட கற்களை கூரையின் மேல் எறிந்ததாக கிராமஅலுவலர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது கிராமஅலுவலர் பிரிவிலுள்ள சிலர் சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகளை தான் தடுத்து நிறுத்தியதின் எதிரொலியாகவே இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கிராமஅலுவலரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .