2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீதி புனரமைப்புக்கு நிதியில்லை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு போதியளவு நிதி, வீதி புனரமைப்பு  சபையிடம் இல்லையெனவும், இதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும் பிரதேச சபை செயலாளர் எஸ்.மிதிலைநாதன் வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

முல்லைத்தீவு, பெரியகுளம், பச்சடம்பன் வீதி நீண்ட காலமாக புனரமைப்படாமல் இருப்பதால் பயணங்களை மேற்கொள்வதில் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், மழைக் காலம் ஆரம்பித்துள்ளமையால் பயணங்கள் மேலும் சிரமமாகலாம் எனவும் அப்பகுதி மக்கள் குறை கூறினர்.

இது தொடர்பில் பிரதேச சபை செயலாளாரை தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'பச்சடம்பன் வீதி 7 கிலோமீற்றர் நீளம் கொண்டதுடன், அவற்றில் 1.4 கிலோமீற்றர் வீதி கடந்த 2011ஆம் ஆண்டு நெல்சிப் திட்டத்தில் கீழ் 7 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. மிகுதியை புனரமைப்பதற்கு நிதி இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கப்பெற்றதும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வோம்.

எமது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் 484.3 கிலோமீற்றர் நீளமுடைய 200 வீதிகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான வீதிகள் புனரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன.

வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .