2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிழக்கில், மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்துக்;கு அமைக்கப்படவுள்ள அரைக்கும் ஆலைக்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) காலை நடைபெற்றது.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரனின் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில், அமைக்கப்படவுள்ள குறித்த அரைக்கும் ஆலைக்கான அடிக்கல்லை பா.டெனிஸ்வரன் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பனங்கட்டிக்கோட்டு கிழக்கு மீனவ கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சருடன் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், பனங்கட்டிக்கோட்டு மீனவ சங்க தலைவர் எஸ்.ஜஸ்ரின் உற்பட கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .