2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னார் சாலையிலிருந்து மேலும் புதிய மூன்று பஸ் சேவைகள்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் இருந்து மேலும் புதிய மூன்று பஸ் சேவைகள் திங்கட்கிழமை முதல்(27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை நேரக்கணிப்பு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சரூன் ஞாயிற்றுக்கிழமை(26) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'மன்னாரில் இருந்து அக்கரைப்பற்றுக்கான சேவை நாளை இரவு 8.15 மணிக்கு மன்னார் சாலையில் இருந்து ஆரம்பமாகும். குறித்த பஸ் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அக்கரைப்பற்றை சென்றடையும்.

இரண்டாவது சேவையாக மன்னாரில் இருந்து முல்லைத்தீவுக்கான சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. காலை 5.15 மணிக்கு மன்னார் சாலையில் இருந்து செல்லும் பயணிகள் பஸ் வவுனியா சென்று அங்கிருந்து கிளிநொச்சி, பரந்தன் ஊடாக முல்லைத்தீவை காலை 10 மணிக்கு சென்றடையும்.
குறித்த பஸ் மீண்டும் மதியம் 12 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து குறித்த பாதைகளூடாக மன்னாரை வந்தடையும்.

மூன்றாவது சேவையாக மன்னாரில் இருந்து புத்தளத்திற்கான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. மன்னார் சாலையில் இருந்து காலை 5.30 மணிக்கு செல்லும் பஸ் இலவங்குளத்தினூடாக காலை 11.45 மணிக்கு புத்தளத்தை சென்றடையும்.

மீண்டும் குறித்த பஸ் மதியம் 12.15 மணிக்கு புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு தனது பயணத்தை தொடரும்'  என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .