2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மானிய உரம் விநியோகம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள தேவையான மானிய உரங்களை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 59 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை வழமை.

அந்தவகையில் இவ்வருடம் 75 சதவீதமான நிலப்பரப்பில் நெற்செய்கைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நெற்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டும், தங்களுக்கான மானிய உரங்கள் வழங்கப்படவில்லையென விவசாயிகள் குற்றம் சுமத்தினார்கள்.

அத்துடன், அண்மையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் இந்த விடயத்தை கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள் சுட்டிக்காட்;டியிருந்தன.

இதன்போது, மானிய உரங்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்தார்.

இதனையடுத்து, மானிய உரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி, புளியம்பொக்கனை, அக்கராயன், பூநகரி, இராமநாதபுரம், முழங்காவில், பளை, உருத்திரபுரம் ஆகிய 8 கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக இந்த மானிய உரங்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .