2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாந்தை மனித புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாந்தை மனிதப் புதைகுழி தோண்டும் நடவடிக்கைகளை நிறைவு செய்வது தொடர்பிலான வழக்கை, மன்னார் நீதவான் நீதிமன்றம் 2015ஆம் ஜனவரி ஆண்டு 26ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது.

மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன் போது மன்னார் பகுதியில் காணாமல் போனவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ஜீ.ராஜகுலேந்திரா தலைமையிலான சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், பி.ரெக்னோ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இவ் வழக்கு விசாரனைகள் முடிவுற்ற நிலையில், அதுதொடர்பில் மன்னார் பகுதியில் காணாமல் போனவர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி ஜீ.ராஜகுலேந்திரா கருத்து தெரிவிக்கையில்,

இவ் வழக்கு கடந்த தடவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது புதைகுழி தோண்டப்பட்ட பகுதியிலே கிணறு ஒன்று காணப்பட்டதாகவும் குறித்த கிணறு மூடப்பட்ட நிலையில் உள்ளதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

ஆகவே, குறித்த பகுதியை தோண்டுவது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் கூறியிருந்தார்.

அதேபோல தோண்டப்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்த நிபுணத்துவ அறிக்கையையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டிருந்தார்.

அதே வேளை குற்றப்புலனாய்வு, பொலிஸ் அதிகாரியையும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் கட்டளையிட்டிருந்தார். அவ்விருவரும் நீதிமன்றத்தில் இன்று (நேற்று) ஆஜராகியிருந்தனர்.

குறித்த மாந்தை மனித புதைகுழியின் பணிகளை தாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாதவாறு தமக்கு சுற்று நிருபம்  கிடைத்துள்ளதாகவும் அதனால் மன்னார் பகுதி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அனுமதி கிடைத்தால் தம்மால் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்தே வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதவான், அடுத்த தவணை வருகின்ற போது குறித்த அறிக்கையை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதேவேளை, புதைகுழி அகழ்வுகளில் இருந்து மனித எலும்புக்கூடுகளோடு கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் குறித்து தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் உத்தரவிட்டார்.

இன்றைய கட்டளையின் பிரகாரம் அடுத்த விசாரணை மீண்டும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .